ஒளியமைப்பில் மிக அவசியமானதாகவும், அடிப்படையானதாகவும், படம்பிடிப்பின்போது பின்பற்ற வேண்டியதுமான படிமுறைகளாகும். இந்த அடிப்படையைக்கொண்டுதான் பெரும்பாலான காட்சிகள் ஒளியமைக்கப்படுகின்றன. இது 'புகைப்படத்துறையிலும்' பின்பற்றக்கூடிய ஒன்றுதான். Three-point lighting என்று அழைக்கப்படும் இந்த முறையை ஆதாரமாககொண்டுதான் எல்லா வகையான ஒளியமைப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் அதைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்வது அவசியம்.
Three-point lighting என்பது வேறொன்றுமில்லை, மூன்று விளக்குகளைக்கொண்டு அல்லது மூன்று நிலைகளிலிருந்து ஒளியமைப்பது என பொருள் கொள்ளலாம்.
1. Key Light - ஆதார ஒளி
2. Fill Light - துணை ஒளி
3. Back Light – பின்புற ஒளி
1. Key Light - ஆதார ஒளி: இந்த 'Key Light' என்பது ஒரு 'Subject'-ன் ஒரு பக்கத்தில் இருந்து கொடுக்கப்படும், அதாவது ஒரு நபரின் ஒரு பக்கத்திலிருந்து, இடதுபக்கம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு பக்கத்திலிருந்து ஒளி படும் போது ஒருபக்கம் ஒளியூட்டப்பட்டும் அடுத்தப்பக்கம்(வலதுப்பக்கம்) நிழலும் விழும். மேலும் இந்த 'Key Light'ஆனது அந்த 'Subject'-ஐ தெளிவாக வரையறுக்கும். இந்த ஒளியே அந்த பொருளை அல்லது நபரை படம் பிடிப்பதிற்கான ஆதார ஒளியாகும்.
2. Fill Light - துணை ஒளி: இந்த 'Fill Light' என்பது 'Key Lights' உருவாகும் நிழலை குறைப்பதற்கு அல்லது முழுமையாக நீக்குவதிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'Key Light'-க்கு மறுபக்கத்தில் 'Fill Light' வைக்கப்படும். இந்த 'Fill Light' ஆனது 'Key Light'-ஐ விட குறைவாக இருக்கும், மேலும் இது 'Soft Light'-ஆகவும் இருக்கும்.
இந்த இரண்டு ஒளிகளைக்கொண்டு ஒரு பொருளை அல்லது நபரை(Subject) தெளிவாக ஒளியூட்டி விடலாம். 'subject'- இன் முழுபரிமாணமும் தெளிவாக படம்பிடிக்க முடியும்.
3.Back Light - பின்புற ஒளி: இரண்டு ஒளிகளைக்கொண்டு ஒரு 'Subject'ஜ ஒளியூட்டப்பட்ட பிறகு, அந்த 'Subject'-ஐ அதன் பின்புலத்திலிருந்து பிரிப்பதற்கு இந்த மூன்றாவது 'Back Light' பயன்படுகிறது. அதாவது ஒரு 'Subject' -யின் பின்புறத்திலிருந்து (Back Side) இந்த ஒளி கொடுக்கப்படுகிறது, அதனால்தான் இது 'Back Light' என அழைக்கப்படுகிறது.
இப்படி பின்புறத்திலிருந்து ஒளி கொடுப்பதனால், அந்த 'Subject'-ன் வடிவத்தை அதன் பின்புலத்திலிருந்து பிரித்து தனித்து காட்டிவிட முடிகிறது. இதனால் 'Subject' அதன் பின்புலத்தோடு 'ஒன்றிவிடுவதிலிருந்து'(Merge) தவிற்க முடிகிறது. இந்த முறையை 'High Light' என்றும் சொல்லுகிறார்கள்.
ஏன் Three-point lighting?
ஏன் இப்படி மூன்று நிலைகளிலிருந்து ஒளியமைக்கவேண்டும்?
ஏன் இது ஆதார ஒளியமைப்பு முறையாக இருக்கிறது?
ஏன் இது காலம்காலமாக பின்பற்றப்படுகிறது?
இந்த கேள்விக்கு பதில் தேடினால்..
mLj;j gjptpy; ghh;h;Nghk;
rp.J\pfud;
vbl;lh;
Himalaya Creations

















