Thursday, May 24, 2012

திரை உலகில் படத்தொகுப்பு






பொழுதுபோக்கு மற்றும் மீடியா துறைகளில் பணிபுரியும் ஆர்வம் மிக்க கலைத்திறன் கொண்டவர்களுக்குவீடியோ எடிட்டிங்துறை வாய்பபுகளை அள்ளித் தரும் துறையாக திகழ்கிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை மாற்றியமைப்பது மற்றும் மறுசீரமைப்பதன் மூலமாக புதிய வடிவமிக்க வீடியோக்களாக மாற்றுவது தொடர்புடைய பணிகளே வீடியோ எடிட்டிங் துறையின் அடிப்படைப் பணியாகும்
கலை நயமிக்க வீடியோ வடிவங்கள் இதனால் தான் உருவாகின்றன. தயாரிப்புப் பணிகளுக்குப் பின் முக்கியப் பணியாக வீடியோ எடிட்டிங் திகழ்கிறது. ஒரு வீடியோ எடிட்டராக இருப்பவர் பின்னணி இசையை எடிட் செய்வது, படம் மற்றும் வீடியோ காட்சிகளை எடிட் செய்து திரையில் கொண்டு வருவது போன்ற முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது
லீனியர் எடிட்டிங், நான்-லீனியர் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் வீடீயோ எடிட்டிங் என்னும் 3 பிரிவுகள் இதில் உள்ளன. டிஜிட்டல் வீடியோ எடிட்டிங் முறையில் கம்ப்யூட்டரின் உதவியுடன் திரைக்காட்சிகள் எடிட்டிங் செய்யப்படுகின்றன. நான்-லீனியர் எடிட்டிங் முறையில் ஆடியோ மற்றும் வீடியோக்கள் கம்ப்யூட்டரின் நினைவடுக்கில் பதியப்பட்டு பின்பு தனி சாப்ட்வேர் உதவியுடன் எடிட் செய்யப்படுகின்றன. இன்று அதிகரித்துக் கொண்டே வரும் திரைப்பதிவுகள், வீடியோ காட்சிகள் மற்றும் இன்டர்நெட் தளங்களின் விளைவாக வீடியோ எடிட்டிங் துறையில் புதிது புதிதான பல்வேறு வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே வருகின்றன
கடுமையான போட்டியை இது உள்ளடக்கியிருப்பதால் இத்துறையை தேர்வு செய்பவர்கள் அதற்குத் தேவைப்படும் திறன்களோடு எப்போதும் தயாராக இருப்பது முக்கியம். இத்துறையில் சிறந்து விளங்க அடிப்படையிலேயே ஒருவர் தானாகவே திறம்பட செயல்படும் உந்து சக்தியையும் கிரியேடிவ் ஆர்வத்தையும் பெற்றிருக்க வேண்டும். எதையும் கூர்ந்து கவனித்து விபரமறியும் சுபாவம், கேமராக்கள் பற்றிய அடிப்படையான பொது அறிவு மற்றும் அர்ப்பணிப்பு குணம் ஆகியவற்றைப் பெற்றிருப்பவர் இதில் மிளிரலாம். படித்திருப்பதால் மட்டுமே ஒருவர் வெற்றி பெற முடியாது என்பதையும் துறையின் நுணுக்கங்களை இயல்பான தனது கிரியேடிவ் திறன்களோடு இணைத்து மட்டுமே ஒருவர் சிறப்பான பணி வாய்ப்பைப் பெற முடியும் என்பதையும் நன்றாக மனதில் கொண்டு துறையில் நுழைவது பற்றிய முடிவை நாம் எடுக்க வேண்டும்.

rp. J\pfud;
Himalaya creations.Pvt.Ltd


No comments:

Post a Comment